கோவையில் வாகனத்தின் சக்கரங்கள் சாலையில் புதைந்ததால் பரபரப்பு


கோவையில் வாகனத்தின் சக்கரங்கள் சாலையில் புதைந்ததால் பரபரப்பு
x

பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

கோவை மாவட்டம் லாலி ரோடு சிக்னல் அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பாக குழி தோண்டப்பட்டு பணிகள் மேற்க்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் அங்கு தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த வழியே சென்ற அரசு பேருந்தின் சக்கரங்கள் பள்ளத்தில் சிக்கிக் கொண்டன. இதையடுத்து பேருந்தை மீட்கும் பணியில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியே சென்ற வேன் உள்ளிட்ட சில வாகனங்களும் பள்ளத்தில் சிக்கியதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story