இடிந்து விழுந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

இடிந்து விழுந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
x

ஒரத்தநாடு அருகே இடிந்து விழுந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பதிலாக புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என்று கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

ஒரத்தநாடு அருகே இடிந்து விழுந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பதிலாக புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என்று கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

இடிந்து விழுந்த நீர்த்தேக்க தொட்டி

ஒரத்தநாடு ஒன்றியம் ஆம்பலாப்பட்டு தெற்கு ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரம்பயம் பகுதியில் ஆழ் குழாய் கிணறுடன் கூடிய 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தது. இந்த தொட்டியின் மூலம் அப்பகுதியை சேர்ந்த சுமார் 120 குடும்பங்களுக்கு ஊராட்சியின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென இடிந்து விழுந்தது.

புதிய நீர்த்தேக்க தொட்டி

பயன்பாட்டில் இருந்து வந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்ததால் இதன் மூலம் குடிதண்ணீர் பெற்று வந்த குடும்பங்களுக்கு தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் குடிநீருக்காக அன்றாடம் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பழுதடைந்து இடிந்து விழுந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பதிலாக விரைவாக புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story