புதிதாக வந்த சாதுக்களின் கைரேகைகள் சேகரிப்பு


புதிதாக வந்த சாதுக்களின் கைரேகைகள் சேகரிப்பு
x

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் புதிதாக வந்த சாதுக்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் புதிதாக வந்த சாதுக்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டது.

சாதுக்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த கிரிவலப்பாதை தமிழகத்தில் அதிக அளவிலான சாதுக்கள் உள்ள பகுதியாகவும் உள்ளது.

பவுர்ணமி நாட்களில் சாதுக்கள் போர்வையில் சிலர் கிரிவலம் வரும் பக்தர்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவது, மிரட்டி பணம் பறிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து போலீசாருக்கு புகார்கள் வந்தன.

மேலும் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கவும் சிலர் திருவண்ணாமலைக்கு பவுர்ணமி நாட்களில் வருகை தருவதாகவும் புகார்கள் வந்துள்ளது.

கைரேகைகள் சேகரிப்பு

அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் இன்று வெளிப்பகுதியில் இருந்து புதிதாக வந்த சாதுக்களை போலீசார் அடையாளம் அடையாளம் கண்டு அவர்களை கிரிவலப்பாதையில் உள்ள மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து கைரேகைகள் சேகரித்தனர்.

மேலும் அவர்களது கைரேகைகள் குற்றவழக்குகளில் பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வரும் குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒத்து போகிறதா அல்லது அவர்கள் மீது வேறு ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா என்று கண்டறியப்பட்டது.

மேலும் போலீசாரும், சமூக நலத்துறை அதிகாரிகளும் இணைந்து கிரிவலப்பாதையில் குழந்தைகள் வைத்து எவரேனும் பிச்சை எடுக்கின்றனரா என்று சோதனை நடத்தினர்.

அப்போது பிச்சை எடுத்து கொண்டிருந்த 14 குழந்தைகள் மீட்கப்பட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story