கள்ளக்குறிச்சியில் கடன் தொகைக்கு கூடுதல் பணம் வசூலித்த 2 பேர் கைது


கள்ளக்குறிச்சியில்  கடன் தொகைக்கு கூடுதல் பணம் வசூலித்த 2 பேர் கைது
x

கள்ளக்குறிச்சியில் கடன் தொகைக்கு கூடுதல் பணம் வசூலித்த 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி


சின்னசேலம் அருகே அம்மகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் குமரேசன். இவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 55), அவரது மகன் முருகன் (32), கார்த்திகேயன் மனைவி பெரியநாயகம் ஆகியோரிடம் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு ரூ.25 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.

இந்த கடனை 2 ஆண்டுகளுக்குள் வழங்கும் வகையில், தனது வீட்டை வைத்து ஒரு ஆவணத்தையும் ஏற்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. காலக்கெடு முடியும் நிலையில், குமேரசன் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 31 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் அதை வாங்காமல், ரூ. 52 லட்சத்து 55 ஆயிரம் கொடுத்தால் தான் மறுகிரையம் செய்து தருவதாக கூறி உள்ளனர்.

வீட்டின் மதிப்பு ரூ.1 கோடி என்பதால் வேறு வழியின்றி 52 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை கொடுத்து தனது வீட்டை குமரேசன் மீட்டார். இதன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக குமரேசன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூடுதல் பணம் வசூலித்த சுப்பிரமணியன், முருகன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.


Next Story