திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1.55 கோடி உண்டியல் காணிக்கை வசூல்


திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1.55 கோடி உண்டியல் காணிக்கை வசூல்
x

கோவில் உண்டியலில் ஒரு கோடியே 55 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணம் ரொக்கமாக கிடைத்துள்ளது.

திருவள்ளூர்,

திருத்தணி முருகன் கோவில் முருக பெருமானின் புகழ் பெற்ற 5-ம் படை திருத்தலமாகும். இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் ஒரு கோடியே 55 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணம், 960 கிராம் தங்கம், 11 ஆயிரத்து 100 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக கிடைக்கப்பெற்றன.


Next Story