தர்மபுரி, அரூர் கோ-ஆப்டெக்சில்தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனைகலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்


தர்மபுரி, அரூர் கோ-ஆப்டெக்சில்தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனைகலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 Sep 2023 7:00 PM GMT (Updated: 24 Sep 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி, அரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி சிறப்பு விற்பனையை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

தீபாவளி விற்பனை

தர்மபுரி நாச்சியப்ப கவுண்டர் தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நெல்லிக்கனி விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாந்தி குத்துவிளக்கு ஏற்றி விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் புதிய ரக பட்டு சேலைகளை பார்வையிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கோ- ஆப்டெக்சில் இந்தாண்டு புதிய வடிவமைப்புகளில் காஞ்சீபுரம், ஆரணி, சேலம், தஞ்சாவூர் பட்டு சேலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாட்களிலும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் செயல்படும். அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவ கேட்டு கொள்ளப்படுகிறது.

விற்பனை இலக்கு

தீபாவளி பண்டிகைக்கு தர்மபுரி கோ-ஆப்டெக்ஸ் நெல்லிக்கனி பட்டு மாளிகைக்கு ரூ.1 கோடியே 50 லட்சமும், அரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.35 லட்சமும் என 2 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கும் ரூ.1.85 கோடி விற்பனை இலக்காக நிர்ணயிக்கப் பட்டுள்ளது என்றார்.விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் காங்கேயவேலு, துணை மண்டல மேலாளர் சுப்ரமணியன், தர்மபுரி நெல்லிக்கனி விற்பனை நிலைய மேலாளர்கள் ரெஜினா, சுதாகர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story