தர்மபுரியில்சிறுதானிய பயிர் சாகுபடி பிரசார ஊர்திகலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்


தர்மபுரியில்சிறுதானிய பயிர் சாகுபடி பிரசார ஊர்திகலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 Oct 2023 7:00 PM GMT (Updated: 12 Oct 2023 7:00 PM GMT)
தர்மபுரி

உலக சிறுதானிய ஆண்டையொட்டி சிறுதானிய பயிர் சாகுபடி விழிப்புணர்வு பிரசார ஊர்தி தொடக்க விழா தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கலெக்டர் சாந்தி கொடியசைத்து பிரசார ஊர்தியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ஊர்தியின் மூலம் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களில் சிறுதானிய பயிர் சாகுபடி குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த பிரசாரத்தின்போது உதவி வேளாண்மை அலுவலர் சிறுதானியம் சாகுபடி செய்யும் முறை, சிறுதானியத்தின் பயன்கள், அதில் உள்ள சத்துக்கள், ஊட்டச்சத்து மேலாண்மை, நோய் மேலாண்மை குறித்து விளக்க உள்ளார். அவரிடம் விவசாயிகள் தங்கள் சந்தேகங்களை கேட்டு நிவாத்தி பெறலாம். இதில் வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) குணசேகரன், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய அரசு திட்டம்) அருள்வடிவு, தர்மபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் இளங்கோவன் மற்றும் வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story