கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு தயாரிப்பு தொழில் தொடங்க ரூ.10 லட்சம் மானியம் கலெக்டர் தகவல்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  உணவு தயாரிப்பு தொழில் தொடங்க    ரூ.10 லட்சம் மானியம்  கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு தயாரிப்பு தொழில் தொடங்கரூ.10 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதிய தொழில்

பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குப்படுத்தும் திட்டத்தின் கீழ் புதியதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர், ஏற்கனவே உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் குறு நிறுவனங்கள், சுய உதவிக்குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் பயன்பெறலாம். ரூ.1 கோடி வரையிலான திட்ட தொகை கொண்ட உணவுப்பதப்படுத்தும் தொழில் திட்டங்கள், இந்த திட்டத்தின் கீழ் உதவிபெற தகுதி பெற்றவையாகும்.

இத்திட்டத்தின் கீழ், உணவுப்பதப்படுத்தல் வகைப்பாட்டின் கீழ் அடங்கும் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், காய்கறிகள், பழங்கள், வற்றல் தயாரித்தல், அரிசி ஆலை, உலர்மாவு மற்றும் இட்லி, தோசைக்கான ஈரமாவு தயாரித்தல், சத்து மாவு, பால் பதப்படுத்துதல், உண்ணத்தக்க நிலையிலுள்ள பதப்படுததப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்கவும், ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கவும் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

வங்கிக்கடன்

திட்டத் தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தங்களின் பங்களிப்பாக செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளின் மூலம் கடனாக வழங்கப்படும்.

அரசு திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் மானியம், அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். இதுவரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் இனி வரும் காலங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்டத் தொழில் மையங்கள் மூலமாகச் செயல்படுத்தப்படஉள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story