ஏற்காடு கோடை விழா: மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க, வாகன ஓட்டிகளுக்கு கலெக்டர் அறிவுரை


ஏற்காடு கோடை விழா: மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க, வாகன ஓட்டிகளுக்கு கலெக்டர் அறிவுரை
x

ஏற்காடு கோடை விழாவிற்கு வரும் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் கார்மேகம் அறிவுரை கூறி உள்ளார்.

சேலம்

சேலம்:

ஏற்காடு கோடை விழாவிற்கு வரும் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் கார்மேகம் அறிவுரை கூறி உள்ளார்.

கோடை விழா

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஏற்காட்டில் 45-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கோடை விழா வருகிற 1-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி ஏற்காடு மலைப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஏற்காட்டுக்கு செல்ல சேலம்-ஏற்காடு நெடுஞ்சாலை வழியாகவும், அங்கிருந்து திரும்பும் போது ஏற்காடு-குப்பனூர் வழியாகவும் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் அதிகளவில் வருவதால் முந்தி செல்ல வேண்டாம். வழியில் வாகனங்களை நிறுத்தி 'செல்பி' எடுப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் இரவு நேரங்களில் வாகனங்களை ஓட்டும் போது மிகவும் கவனமாக ஓட்ட வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும்.

சாலை விதிகள்

மலைப்பாதையில் நல்ல அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே வாகனங்களை ஓட்ட வேண்டும். மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. ஏற்காடு செல்லும் வாகனங்கள் மற்றும் அங்கிருந்து கீழ் இறங்கும் வாகனங்கள் அனைத்தும் வாகன பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும்.

எனவே ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story