கடலூர் மாநகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி கலெக்டர், மேயர் தொடங்கி வைத்தனர்


கடலூர் மாநகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி கலெக்டர், மேயர் தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 26 May 2023 6:45 PM GMT (Updated: 26 May 2023 6:46 PM GMT)

கடலூர் மாநகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர், மேயர் தொடங்கி வைத்தனர்.

கடலூர்

கடலூர் மாநகராட்சி சார்பில் நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி ஜவான்பவன் அருகில் நடந்தது. பேரணியை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்து, பேரணியில் பங்கேற்றனர். கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமான மதுபாலன், கோட்டாட்சியர் அதியமான்கவியரசு, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து இந்த பேரணி கடலூர் அண்ணாபாலம், பாரதி சாலை, நேதாஜி சாலை சிக்னல் வழியாக சென்று டவுன் ஹாலை சென்றடைந்தது. முன்னதாக மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடியும், மரம் நடுவோம், மழை பெறுவோம், மழைநீர் உயிர் நீர், நீரின்றி அமையாது உலகு, நீர் நிலைகளை பாதுகாப்போம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி ஊழியர்கள், அலுவலர்கள் சென்றனர்.

பேரணியில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மண்டல தலைவர்கள் சங்கீதா, இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சுபாஷினி, பார்வதி, செந்தில்குமாரி, விஜயலட்சுமி, சாய்துன்னிஷா, சரஸ்வதி, ஆராமுது, சரிதா, ஹேமலதா, தகவல் தொழில்நுட்ப பிரிவு கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story