பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு
திருப்புவனம்
திருப்புவனத்தில் உள்ளது வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மொத்தம் 144 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் தேர்வு எழுதிய 144 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் மாணவி ஐஸ்வர்யா அதிக மதிப்பெண்ணான 595 பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடமும், மாணவன் சக்திவேல் அதிக மதிப்பெண்ணாக 594 பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து இருவரையும் பாராட்டி பரிசு வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் பள்ளி முதல்வர், அலுவலர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த தேர்ச்சி சதவீதம் குறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது, பிளஸ்-2 தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 600 மதிப்பெண்களுக்கு 550-க்கு மேல் 21 பேர், 600 மதிப்பெண்களுக்கு 500-க்கு மேல் 58 பேர் பெற்றுள்ளனர். மேலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் 28 பேர்கள் பெற்றுள்ளனர். இதில் மூன்று பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் மூன்று பேரும், இரண்டு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் இரண்டு பேரும் எடுத்துள்ளனர். மேலும் பள்ளியில் படிக்கும் போதே உயர்கல்விக்கும் வழிகாட்டுதல் நடைபெறுகிறது. நீட் மற்றும் ஐ.ஐ.டி. தேர்வுகளுக்கும் பள்ளியிலேயே பயிற்சி வழங்கப்படுகிறது எனவும் நிர்வாகத்தினர் கூறினர்.