கலெக்டர் முகாம் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


கலெக்டர் முகாம் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x

மாங்குடி கிராமத்தில் கல்குவாரியை மூடக்கோரி கலெக்டர் முகாம் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே மாங்குடி கிராமத்தில் தமிழக அரசு சார்பில் கல் குவாரி ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த குவாரி செயல் பட தொடங்கினால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பெருமளவு பாதிக்கப்படும். எனவே இந்த குவாரிக்கு தடை விதிக்க வேண்டும், குவாரி செயல்பட அனுமதிக்க கூடாது என்று பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்குவாரியை மூடக்கோரி கைக்குழந்தைகளுடன் நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

1 More update

Next Story