ரேஷன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு
கொண்டாபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை
நெமிலி தாலுகா, காவேரிப்பாக்கம் அருகே உள்ள கொண்டாபுரம் ரேஷன் கடையில் மாவட்ட கலெக்டர் வளர்மதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடையில் அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவை போதுமான அளவு இருப்பு உள்ளதா என்று கேட்டார். பின்பு பொருட்கள் வழங்கும் பதிவேட்டினை சரிபார்த்தார்.
அனைத்து பொருட்களும் தரமாக இருக்கிறதா என்றும், எடை போடும் மிஷின் சரியான முறையில் இயங்குகிறதா என்றும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளர் வேல்விழி, கிராம நிர்வாக அலுவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story