மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்
தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.
தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.
பாராட்டு விழா
தஞ்சை அரண்மனை சத்திரம் நிர்வாகத்திற்குட்பட்ட அரசர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் கற்பித்த ஆசிரிய ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை தாங்கி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:-
தஞ்சை அரண்மனை சத்திரம் நிர்வாகத்திற்கு உட்பட்ட அரசர் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 97 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் தொடர்ந்து தேர்ச்சி சதவிதத்தை அதிகரிக்க சிறப்பான முறையில் கற்பித்த ஆசிரிய ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
அதிகப்படுத்த வேண்டும்
இப்பள்ளியில் முன்னர் 4 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்துள்ளனர். அந்த இலக்கை தாண்டி மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும். புதிதாக திறந்து உள்ள புதிய கட்டிடமானது தனியார் பள்ளிகளுக்கு இணையாக உள்ள கட்டிடம் போன்று அமைக்கப்பட்டுள்ளது
தனியார் பள்ளிகளில் உள்ளது போல் நாற்காவிகள், கரும்பலகை உள்ளிட்ட பல்வேறு வதிசகள் உள்ளது. அதேபோல் தற்போது உயர்நிலைப் பள்ளியில் 6 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு இன்று பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இந்த கட்டிடமும் தரமாக முடிந்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்படும். தற்போது அரசர் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த வாய்ப்பினை மாணவ மாணவிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சான்றிதழ்- கேடயம்
முன்னதாக நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற முதல் மூன்று மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களும், சிறந்த முறையில் கற்பித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ். உதவி பொறியாளர் மணிகண்டன். சத்திரம் தாசில்தார் ஜெயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.