இல்லம் தேடி கல்வி திட்டத்தை கலெக்டர் ஆய்வு


இல்லம் தேடி கல்வி திட்டத்தை கலெக்டர் ஆய்வு
x

வாலாஜா அருகே இல்லம் தேடி கல்வி திட்டத்தை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

ராணிப்பேட்டை

வாலாஜா ஒன்றியம் கடப்பேரி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் 2 வகுப்பறைகளில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகள் பயின்று பயின்று வருகின்றனர். இதில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை என மொத்தம் 38 மாணவ. மாணவிகளும் 9 முதல் முதல் 12-ம் வகுப்பு வரையில் 11 மாணவ மாணவிகளும் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களும் தினமும் மாலையில் 5 மணி முதல் 7 மணி வரை கல்வி பயின்று வருகின்றனர். இங்கு வகுப்பு பாடங்கள், ஓவியங்கள், பாட்டு கற்றுக் கொள்ளுதல், புதிர் வினாடி வினாக்கள், பொது அறிவுகள் போன்ற பல்வகையில் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்றுனர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருவதை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். கணிதம், பொது அறிவு. பழமொழிகள். தமிழ் வார்த்தைகள், ஆங்கில பொது அறிவு ஆகியனவற்றில் கற்பிக்கப்பட்டுள்ளனவற்றை கேட்டறிந்து மாணவர்களின் அறிவுத்திறமையை அவர் ஆய்வு செய்தார.

இந்த ஆய்வின் போது 7-ம் வகுப்பு படிக்கும் சரவணன் என்ற பேச்சாற்றல் குறைவான மற்றும் பார்வை குன்றிய மாற்றுத்திறனாளி மாணவனும். மற்றொரு மாற்றுத்திறனாளி மாணவனும் தினமும் வந்து பாடங்கள் கற்றுக்கொள்வதையும், தங்களது பேச்சாற்றல் மற்றும் அறிவை மேம்படுத்தி வருவதையும் கலெக்டர்் பார்வையிட்டு ஆசிரியர்களை பாராட்டினார்.

ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வ பயிற்றுனர்கள் உடனிருந்தனர்.


Next Story