ரூ.5½ கோடியில் கட்டிய 111 குடும்பங்களுக்கான வீடுகள்-பயனாளிகளிடம் சாவியை கலெக்டர் வழங்கினார்


ரூ.5½ கோடியில் கட்டிய 111 குடும்பங்களுக்கான வீடுகள்-பயனாளிகளிடம் சாவியை கலெக்டர் வழங்கினார்
x

ஆரணியை அடுத்த தச்சூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் ரூ.5½ கோடியில் கட்டப்பட்ட வீடுகளை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததையடுத்து பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவியை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியை அடுத்த தச்சூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் ரூ.5½ கோடியில் கட்டப்பட்ட வீடுகளை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததையடுத்து பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவியை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.

மறுவாழ்வு மையம்

தமிழகம் முழுவதும் 13 மாவட்டத்தில் 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் புதிதாக குடியிருப்புகள் கட்டப்பட்டன. அதன்படி ஆரணியை அடுத்த தச்சூர் கிராமத்தில் சமத்துவபுரம் அருகாமையில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் 111 குடும்பத்தினருக்கு ரூ.5 ேகாடியே 57 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் தனித்தனியே வீடுகள் கட்டப்பட்டன.

வேலூரை அடுத்த மேல் ெமாணவூரில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தச்சூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

முறையான வசதிகள்

பின்னர் குடியிருப்பு வாசிகளுக்கு வீடுகளுக்கான சாவி மற்றும் பாத்திரங்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கினார்.

அப்போது கலெக்டர் முருகேஷ் பேசுகையில், ''பையூர் மற்றும் புதுப்பாளையம் பகுதியில் வசித்த 111 குடும்பங்களுக்கு இங்குள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கி உள்ளார்.

ஒவ்வொரு பயனாளிகள் வீட்டிற்கும் தனித்தனியே குடிநீர் வசதியும், கழிப்பிட வசதியும் முறையாக செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் தற்போது பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர், தெருவிளக்குகள் வழங்கவும் பணிகள் விரைந்து முடித்து தரப்படும்.

மேலும் இப்பகுதிலேயே ஒரு அங்கன்வாடி மையமும் கட்டப்பட்டு வருகிறது. இரண்டொரு மாதத்தில் பணியும் நிறைவு பெறும்'' என்றார்.விழாவில் கூடுதல் கலெக்டர் ரிஷப், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெற்றிவேல், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ.வான ஆர்.சிவானந்தம், மேற்கு ஆரணி ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், ஆரணி ஒன்றிய குழு தலைவர் கனிமொழி சுந்தர், ஆரணி நகர மன்ற தலைவர் ஏ.சி. மணி உள்பட ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.


Next Story