11,329 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள்கலெக்டர் சரயு தகவல்


11,329 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள்கலெக்டர் சரயு தகவல்
x
தினத்தந்தி 30 Sep 2023 7:30 PM GMT (Updated: 30 Sep 2023 7:30 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 329 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சரயு தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 329 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சரயு தெரிவித்தார்.

நிறைவு விழா

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் 5-ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கி காப்பீட்டு திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு பரிசு மற்றும் சிறப்பாக செயல்பட்ட அரசு, தனியார் மருத்துவமனைகள், அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதையடுத்து கலெக்டர் பேசுகையில், மாவட்டத்தில் இந்த 2 திட்டங்கள் மூலம் 11,329 பயனாளிகளுக்கு ரூ.20.11 கோடி மதிப்பில் காப்பீட்டு அட்டைகள் மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3 லட்சத்து 78 ஆயிரத்து 741 குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டு காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

அடையாள அட்டை

காப்பீட்டு திட்ட அட்டை தேவைபடுவோர் ரேஷன், ஆதார் அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட ஆண்டு வருமான சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலக அறை எண்32-ல் செயல்படும் மையத்தை அணுகி இணையத்தில் பதிவு செய்யலாம் என்று பேசினார். இதையடுத்து பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட 10 பேருக்கு அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார். இதில் நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம், மாவட்ட காப்பீட்டு திட்ட அலுவலர்கள் இளந்தரியன், சையத் அலி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story