பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா எண்
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை வினியோகம் குறித்த புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை வினியோகம் குறித்த புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ஒரு முழுக்கரும்பு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,000 ஆகியவை ரேஷன்கடைகளின் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற தற்போது முதல் 8-ந்தேதி வரை டோக்கன்கள் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில் அந்தந்த ரேஷன்கடைகளில் பகுதி வாரியாக டோக்கன்கள் வழங்கப்படும். அதற்கான விவரப்பட்டியல் சம்பந்தப்பட்ட ரேஷன்கடைகளில் தெரிவிக்கப்படும்.
கட்டணமில்லா எண்
முதல்-அமைச்சர் வருகிற 9-ந் தேதியன்று பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதை தொடங்கி வைத்து அன்றையதினமே அனைத்து கடைகளிலும் டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தின்படி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் பச்சரிசி மற்றும் சர்க்கரை பெற கட்டாயம் துணிப்பை கொண்டு வர வேண்டும். அத்துடன் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொங்கல் பரிசு தொகுப்பினை பெறவேண்டும்.
மேலும், பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை வினியோகம் குறித்த புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ஐ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.