கலெக்டர் ஆய்வு


கலெக்டர் ஆய்வு
x

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உள்பட பகுதிகளில் நடைபெறும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆர்த்தி ஆய்வு செய்து பார்வையிட்டார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உள்பட செல்வழிமங்களம், சேந்தமங்கலம், கப்பாங்கோட்டூர், எடையார்பாக்கம், உள்ளிட்ட ஊராட்சிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நூலகம் பழுது பார்க்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆய்வு செய்து பார்வையிட்டார்.

பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட செயற்பொறியாளர் அருண், உதவி செயற்பொறியாளர் சரவணன், ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், பவானி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story