பொங்கல் பொருட்கள் வழங்க டோக்கன் வினியோகம்; கலெக்டர் விசாகன் ஆய்வு


பொங்கல் பொருட்கள் வழங்க டோக்கன் வினியோகம்; கலெக்டர் விசாகன் ஆய்வு
x

பொங்கல் பொருட்கள் வழங்க டோக்கன் வினியோகம் செய்யும் பணியை கலெக்டர் விசாகன் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடும் வகையில், ரேஷன்கடைகளில் வருகிற 9-ந்தேதி முதல் பொங்கல் பொருட்கள், கரும்பு, ரூ.1,000 ஆகியவை வழங்கப்பட உள்ளன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 6 லட்சத்து 79 ஆயிரத்து 18 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள், கரும்பு, பணம் வழங்கப்படுகிறது.

இதையொட்டி ரேஷன்கடைகளில் ஒரே நேரத்தில் மக்கள் குவிந்து விடாமல் தவிர்க்க, தினமும் 200 முதல் 250 பேருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ரேஷன்கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர். அதன்படி நேற்று வரை 2 நாட்களில் மொத்தம் 3 லட்சத்து 752 டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் திண்டுக்கல் கோபால்நகர் விஸ்தரிப்பு பகுதியில் டோக்கன் வழங்கும் பணியை நேற்று கலெக்டர் விசாகன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களை வாங்கி சரிபார்த்தார். மேலும் 8-ந்தேதிக்குள் அனைவருக்கும் விடுபடாமல் டோக்கன் வழங்க வேண்டும் என்று ரேஷன்கடை ஊழியரிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் லதா, பொது வினியோக திட்ட துணை பதிவாளர் அன்புக்கரசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story