வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 11 Jun 2023 12:15 AM IST (Updated: 11 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மை துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகள் வேளாண் பணிகளை மேற்கொண்டு வருவதை நேற்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வல்லந்தை, எழுவனூர் கிராமத்தில் விவசாயிகள் ஒருங்கிணைந்து பண்ணைய திட்டத்தில் வேளாண் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு பயன்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து கலெக்டர் கூறுகையில், இத்திட்டம் ஒவ்வொரு ஆண்டும் 65-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் தேர்வு செய்து அந்தந்த ஊராட்சிகளில் விவசாயிகளிடம் பயன்படுத்தாமல் உள்ள நிலங்களை கண்டறிந்து குழு அமைத்து பண்ணைய திட்டத்தில் பயன்படுகின்ற வகையில் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

முழு மானியம்

இதன் மூலம் 5 ஆண்டுகளில் அனைத்து ஊராட்சிகளிலும் பயன்பாடற்ற நிலங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றி சீரமைத்து 4 அல்லது 5 விவசாயிகள் ஒருங்கிணைந்து 15 ஏக்கர் வரை சீரமைத்து அந்தந்த விவசாய குழுகளுக்கு அந்தந்த பகுதிகளில் எந்த வகையான பயிர் சாகுபடிகளை மேற்கொள்ள முடியும் என்பதை அறிந்து அதற்கான திட்டங்களை முழு மானியத்துடன் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படுகிற ஊராட்சிகளில் விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான பயன்பாடற்ற நிலங்களை சீரமைத்து விவசாயிகள் கொண்ட குழுவாக சேர்ந்து பண்ணையத்திட்டத்தில் விவசாய பணிகள் மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, கூட்டுறவுத்துறை, மீன் வளர்ப்பு துறை, கால்நடை பராமரிப்பு துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வருவாய்த்துறை ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

விவசாய பணிகள்

விவசாயிகள் தங்களுக்கு தேவையான திட்டங்களை மேற்கண்ட துறைகள் மூலம் பெற்று வரும் காலங்களில் அனைத்து பகுதிகளிலும் அனைத்து விவசாய நிலங்களிலும் விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை விவசாயிகள் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது வேளாண்மை துறை இணை இயக்குனர் சரஸ்வதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, மாவட்ட கவுன்சிலர் மற்றும் வடக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் வாசுதேவன், கமுதி தாசில்தார் சேதுராமன், கமுதி யூனியன் ஆணையாளர்கள் மணிமேகலை, சங்கரபாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story