ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் கலெக்டர் ஆய்வு


ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் கலெக்டர் ஆய்வு
x

வாலாஜா ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவிகளுக்கான அரசினர் மாணவிகள் விடுதியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் மாணவிகளின் அறைகளில் உள்ள அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதிகள், மின் விளக்கு, மின்விசிறி, தங்கும் அறைகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து விடுதியில் இருந்த நூலகத்தில் என்னென்ன வகையான புத்தகங்கள் உள்ளன என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாணவிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு தயார் படுத்தி வருவதையும், அவர்களின் அறிவுத் திறனையும் கேட்டறிந்தார். அரசு தேர்வுகளுக்கு நல்ல முறையில் பயிற்சி பெற வேண்டும், என மாணவிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

மாணவிகள் விடுதியின் வெளியே காலியாக உள்ள இடங்களை சுத்தம் செய்து அந்த இடத்தில் மரம், செடிகள் மற்றும் காய்கறி தோட்டங்களை நட்டு பராமரிக்க வேண்டும், என வாலாஜா தாசில்தாரிடம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது தாசில்தார் ஆனந்தன், விடுதி காப்பாளர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story