மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு


மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 30 Sep 2023 6:45 PM GMT (Updated: 30 Sep 2023 6:45 PM GMT)

விழுப்புரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு கிடங்கின் உறுதித்தன்மை குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம்


இந்திய தேர்தல் ஆணையத்தினால் விழுப்புரம் மாவட்டத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 4,365-ம் (பேலட் யூனிட்), கட்டுப்பாட்டு கருவிகள் 2,811-ம் (கண்ட்ரோல் யூனிட்), யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் கருவி 3,058-ம் (விவிபேட்) ஆக மொத்தம் 10,234 மின்னணு வாக்கு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தால் பெல் நிறுவனம் மூலம் விழுப்புரம் மாவட்டத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பொறியாளர்களை கொண்டு சரிபார்ப்பு பணிகள் முடிக்கப்பட்டு அவை அனைத்தும் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆய்வு

இந்நிலையில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் சி.பழனி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு கிடங்கிற்கு நேரில் சென்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் உள்ளதா என்றும், சேமிப்பு கிடங்கின் உறுதித்தன்மை குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தில்குமார், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் கோவர்தனன், விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன் மற்றும் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் தயாஇளந்திரையன், அ.தி.மு.க. வக்கீல் தமிழரசன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ், நகர தலைவர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார், தே.மு.தி.க. நகர செயலாளர் மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி கலியமூர்த்தி, பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story