அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு


அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
x

புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட தாய்மார்களை சந்தித்து அவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சைக்கான ஊக்கத் தொகை ஆகியற்றை வழங்கிய அவர் அங்குள்ள தாய்மார்களிடம் கருத்தடை அறுவை சிகிச்சை குறித்தும், அதற்காக அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார். மேலும் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்தும், திருமண வயது நிரம்பிய ஆண் மற்றும் பெண்கள் மட்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் சிவகுமார், மாவட்ட திட்ட அலுவலர்(சுகாதாரம்) பங்கஜம், வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார், வட்டார மேற்பார்வையாளர் ரவி, மாவட்ட கவுன்சிலர் அஸ்வினிசெந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சித்ராதாஸ் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story