பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு


பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு
x

விருதுநகர் அருகே பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு செய்ததுடன், காலை உணவின் தரத்தையும் ேகட்டறிந்தார்.

விருதுநகர்

விருதுநகர் யூனியன் பகுதியில் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். விருதுநகர் சிவஞானபுரம் யூனியன் நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உணவு குறித்து ஆய்வு செய்து பயன்பெறும் மாணவர்களிடம் தரம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் சிவஞானபுரம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 15.13 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் பாலத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரிய பேராலி பஞ்சாயத்தில் தொடக்கப்பள்ளியில் ரூ. 23.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்களையும் பெரிய பேராலி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 8.58 லட்சம் மதிப்பீட்டில் கிணறு அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் பார்வையிட்டுஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி என்ஜினீயர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story