வேளாண்மை பணிகளை கலெக்டர் ஆய்வு


வேளாண்மை பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் வேளாண்மை பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டைக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வந்தார். பின்பு நித்திய கல்யாணி அம்மன் கோவில் அருகில் உள்ள வயல்களில் நடந்துவரும் வேளாண்மை பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது, செங்கோட்டை வனத்துறை அலுவலகம் அருகே உள்ள மதுபான கடையை வழிபாடு ஆலயம் அருகில் மாற்றம் செய்வதாக தெரிகிறது, இந்த இடத்தில் இருக்கும் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என்று அனைத்து சமுதாயம் சார்பில் கோரிக்கை மனு கொடுத்தனர். இது சம்பந்தமாக பரிசீலனை செய்வதாக கூறினார்.

இதையடுத்து நகராட்சி முத்துசாமி பூங்கா எதிர்புறம் இருக்கும் அரசு தென்னை நாற்று பண்ணையில் ஆய்வு செய்தார். நடந்து வரும் வேளாண்மை பணிகள் குறித்து செங்கோட்டை வட்டார வேளாண்மை துணை அலுவலர் சேக்மைதீன் கலெக்டரிடம் கூறினார்.

பின்பு நகர தி.மு.க. செயலாளர் வக்கீல் வெங்கடேசன், குண்டாறு அணைக்கு செல்லும் கே.ஸி.ரோட்டில் மேலூர் அரசு உயர்நிலைப்பள்ளி முகப்பை மறைத்து அரசு கட்டிடம் கட்டப்போவதாக தெரிகிறது, பள்ளி நலன் கருதி கட்டிடம் கட்டுவதற்கு அனுமதிக்கூடாது என்று கோரிக்கை மனு கொடுத்தார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் கங்காதேவி, தி.மு.க. தலைமைக்கழக பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.ரஹீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story