வேளாண்மைத்துறை பணிகளை கலெக்டர் ஆய்வு


வேளாண்மைத்துறை பணிகளை கலெக்டர் ஆய்வு
x

காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார்.

ராணிப்பேட்டை

கலெக்டர் ஆய்வு

காவேரிப்பாக்கம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு உழவன் செயலியின் மூலம் பதிவு செய்து வேளாண் விதை பொருட்கள், உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் விவசாயிகளுக்கு பதிவு செய்து வழங்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வேளாண் விதைகள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கப்படுவது குறித்த பதிவேட்டை பார்வையிட்டார். மேலும் 6 விவசாயிகளுக்கு பண்ணை உபகரணங்கள், உளுந்து விதைகள், ஜிப்சம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள மண் பரிசோதனை மையத்தை ஆய்வு செய்தார். பின்பு வேகாமங்கலம் ஊராட்சியில் இயற்கை விவசாயி சண்முகராமன் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி செய்யும் பணியை, ஆண்டாள் விவசாய பெண்கள் குழுவினருடன் மேற்கொண்டு வருவதை பார்வையிட்டு இயற்கை விவசாயம் குறித்து கேட்டறிந்தார்.

உழவர் உற்பத்தியாளர் குழு

பின்னர் ஓச்சேரி கிராமத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் இயங்கிவரும் அத்திவரதர் உழவர் உற்பத்தியாளர் குழுவின் செயல்பாடுகளை நேரடியாக கேட்டறிந்தார். வேகாமங்கலம் ஊராட்சியில் இயற்கை உரங்கள் தயார் செய்வதையும் கலெக்டர் வளர்மதி பார்வையிட்டார்.

வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, காவேரிப்பாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம், காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சையுப்தீன், தண்டாயுதபாணி, ஒன்றிய பொறியாளர் ஏகநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயமணி (வேகாமங்கலம்), சங்கீதா ஜெயகாந்தன் (ஓச்சேரி) ஆகியோர் உடனிருந்தனர்.

1 More update

Next Story