வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x

ஆலங்காயம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம், மிட்டூர் ஊராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளியில் ரூ.30.37 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்டும் பணி மற்றும் ரூ.9.61 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கழிவறைகள் கட்டுமான பணி ஆகிய வளர்ச்சி திட்டப்பணிகள் நடக்கிறது. இதனை மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கட்டுமானத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள கம்பி உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், தரமான முறையில் கட்டுமான பணிகள் நடைபெற வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, உதவி செயற்பொறியாளர் மகேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story