வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x

நாட்டறம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவரிடம் அப்பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, தாசில்தார் சம்பத் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story