வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x

தண்டராம்பட்டு ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்சிறுபாக்கம், ராதாபுரம், தண்டராம்பட்டு, எடத்தனூர், திருவடத்தனூர், சாத்தனூர் ஆகிய ஊராட்சிகளில் சுமார் ரூ.2 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம், நூலகம் பராமரிப்பு பணி, மழை நீர் சேகரிப்பு தொட்டி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம், நடுநிலை பள்ளி கட்டிடங்கள் ஆகிய வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர்.பா.முருகேஷ் இன்று ஆய்வு செய்தார்.

அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக் கொண்டார்.

பின்னர் தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த உள்நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். மேலும் டாக்டர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

மருத்துவமனையை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனஅறிவுறுத்தினார்.

ஆய்வின்போது திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி, வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், தாசில்தார் அப்துல் ரகூப் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story