தோட்டக்கலை பயிர்களை கலெக்டர் ஆய்வு


தோட்டக்கலை பயிர்களை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 1 April 2023 7:15 PM GMT (Updated: 1 April 2023 7:15 PM GMT)

கீழையூர் பகுதியில் தோட்டக்கலை பயிர்களை கலெக்டர் அருண்தம்புராஜ் அய்வு செய்தார்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம், கீழையூர் ஊராட்சி ஒன்றியம் வேட்டைக்காரணிருப்பு ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் பயிரிடப்பட்டுள்ள தோட்டப்பயிர்களை கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது பயிரிடும் முறை குறித்து கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மானியத்தில் காளான் வளர்க்கும் குடிலையும், ரூ.6 ஆயிரம் மானியத்தில் கொத்தவரை பயிரிட்டுள்ளதையும், ரூ.4 ஆயிரம் மானியத்தில் மிளகாய், கத்தரி பயிட்டுள்ளதையும் பார்வையிட்டார். ஆய்வின்போது மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கண்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story