ஆற்காடு ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
ஆற்காடு ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆற்காடு
ஆற்காடு ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் தாழனூர் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற செயலாளர் அலுவலகம், ராமாபுரம் கிராமத்தில் கட்டப்படும் அங்கன்வாடி கட்டிடம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையற் கூடம், கூராம்பாடி ஊராட்சியில் கட்டப்படும் இரண்டு வகுப்பறை பள்ளி கட்டிடங்கள் ஆகியவற்றை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கூராம்பாடி முதல் கிருஷ்ணாபுரம் வரையிலான தார் சாலை அமைக்கும் பணிகள், சிறு பாலம் அமைக்கும் பணிகள், தாஜ்புரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டிட பணிகள், தாஜ்புரா ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், மாங்காடு, பாப்பேரி, கரிக்கந்தாங்கல் ஆகிய ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகள், சிறு பாலம் பணிகள், கிராம சாலை பணிகள் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் லோகநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், ஷான்வாஸ் உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் ராஜேஷ் குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் புஷ்பா, திலகம், லட்சுமி, கண்ணகி, சசிகலா, பாரதி உள்பட பலர் உடன் இருந்தனர்.