உழவர் சந்தையை கலெக்டர் ஆய்வு
உழவர் சந்தையை கலெக்டர் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோட்டில் இயங்கி வரும் உழவர் சந்தையை நேற்று காலை கலெக்டர் கற்பகம், பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ஆய்வு செய்தார். அப்போது உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு முறையாக கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளதா?, காய்கறிகள் தரமானதாக வழங்கப்படுகின்றதா? என்பது குறித்து பார்வையிட்ட கலெக்டர், அருகே வார சந்தையாக இயங்கி வந்த இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். செடி, கொடிகள், முள்செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கும் அந்த இடத்தை சுத்தமாக வைத்திடவும், மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகாத வகையில் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் நகராட்சி ஆணையருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story