அங்கன்வாடி கட்டிடங்களை ஆய்வு செய்த கலெக்டர்


அங்கன்வாடி கட்டிடங்களை ஆய்வு செய்த கலெக்டர்
x

அங்கன்வாடி கட்டிடங்களை ஆய்வு செய்த கலெக்டர்

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து சேதமடைந்து உள்ளதாக மாவட்ட கலெக்டர் வினீத்திற்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்த பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையங்களில் ஏராளமான மாணவ-மாணவிகள், குழந்தைகள் படித்து வருவதால் இடநெருக்கடி இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அங்கன்வாடி கட்டிடம் மாற்றி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அங்கன்வாடி கட்டிடங்களை மாவட்ட கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார். அப்போது 44-வது கவுன்சிலர் கண்ணப்பன், 45-வது வார்டு கவுன்சிலர் பாத்திமா தஸ்ரின், 50-வது வார்டு கவுன்சிலர் பெனாசிர் நசீர்தீன் ஆகியோர் அங்கன்வாடி கட்டிடம் மற்றும் தொடக்கப்பள்ளி அமைப்பது குறித்து தங்களது கோரிக்கையை கலெக்டரிடம் முன்வைத்தனர். வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் இடநெருக்கடியை தவிர்க்கும் விதமாகவும், மாணவ-மாணவிகளின் கல்வியை மேம்படுத்தும் வகையிலும் பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களை அதில் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

----


Next Story