குறைகள் சம்பந்தமாக வரும் பொதுமக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்

குறைகள் சம்பந்தமாக வரும் பொதுமக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்
x

குறைகள் சம்பந்தமாக கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை,

குறைகள் சம்பந்தமாக கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நிரந்தர தீர்வு

ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

புதிய கலெக்டர் அலுவலக வளாகம் தமிழக முதல் - அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த வளாகம் அனைத்துத்துறை அலுவலகங்களும் இயங்கிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்திற்கு குறைகள் தீர்க்க வருகை தரும் பொதுமக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பெருந்திட்ட வளாகத்தில் அவர்களுக்கான வசதிகள் உள்ளதை துறை சார்ந்த அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். புதிய அலுவலகத்தில் பணியாற்றும்போது உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டும்.

ஒருங்கிணைந்து...

மக்களுக்கு, அரசு பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதனை உரிய முறையில் பயன்படுத்தி நாம் அனைவரும் ஒன்றிணைந்து ராணிப்பேட்டை மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், துணை கலெக்டர்கள், தாசில்தார்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story