தூய்மை பணியில் ஈடுபட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி


தூய்மை பணியில் ஈடுபட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி
x
தினத்தந்தி 23 Aug 2022 7:30 PM GMT (Updated: 23 Aug 2022 7:30 PM GMT)

பெத்ததாளப்பள்ளியில் தூய்மை பணியில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி ஈடுபட்டதுடன், ‘நம்ம ஊரு சூப்பரு’ இயக்க விழிப்புணர்வு பேரணியையும் தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி

பெத்ததாளப்பள்ளியில் தூய்மை பணியில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி ஈடுபட்டதுடன், 'நம்ம ஊரு சூப்பரு' இயக்க விழிப்புணர்வு பேரணியையும் தொடங்கி வைத்தார்.பெத்ததாளப்பள்ளியில் தூய்மை பணியில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி ஈடுபட்டதுடன், 'நம்ம ஊரு சூப்பரு' இயக்க விழிப்புணர்வு பேரணியையும் தொடங்கி வைத்தார்.

தூய்மை பணியில் கலெக்டர்

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் 'நம்ம ஊரு சூப்பரு' இயக்க விழிப்புணர்வு பேரணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி முன்னிலை வகித்தார். அப்போது கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, அங்கு கிடந்த குப்பைகளை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து 'நம்ம ஊரு சூப்பரு' இயக்க விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.பின்னர் கலெக்டர்பேசியதாவது:-

பசுமை ஊராட்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கடந்த 20-ந் தேதி முதல் வருகிற அக்டோபர் மாதம் 1-ந் தேதி வரை 'நம்ம ஊரு சூப்பரு' இயக்கம் சார்பாக பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் ஒட்டு மொத்தமாக சுத்தம் செய்தல், குடிநீர், சுகாதாரம், கழிவு மேலாண்மை குறித்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,

குடியிருப்பு மற்றும் நிறுவனங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிளாஸ்டிக் கழிவுகளை தடை செய்தல் மற்றும் துணிப்பைகளை பயன்படுத்துதல், தூய்மை மற்றும் பசுமையான ஊராட்சியை உருவாக்குதல் குறித்து விழிப்புணர்வு பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

விழிப்புணர்வு

பொது இடங்களில் குப்பைகளை தவிர்ப்பதன் மூலம் சுற்றுப்புறத்தினை பசுமையாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே 'நம்ம ஊரு சூப்பரு' இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

இவ்வாறு கலெக்டர்கூறினார்.

நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் சந்தானம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, வேடியப்பன், தாசில்தார் நீலமேகம், வட்டார மருத்துவ அலுவலர் சுசித்ரா, ஒன்றிய குழு தலைவர் அம்சா ராஜன், ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளி வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story