பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 16 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி கலெக்டர் கார்மேகம் வழங்கினார்


பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ௧௬ மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

சேலம்

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இதில் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். மொத்தம் 304 மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் முதல்நிலை அலுவலர்கள் மட்டும் கலந்துகொள்ள கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை விரைவாக கணினியில் பதிவேற்றம் செய்திட கூடுதல் பணியாளர்கள் அமர்த்திட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு 28 மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனு பெற்றார். இதையடுத்து 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.53 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் மயில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story