விழுப்புரம் மாவட்டத்தில் வீடுகள், அரசு அலுவலகங்களில் 3 நாட்கள் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் அவமதிப்பு செய்தால் கடும் நடவடிக்கை என கலெக்டர் மோகன் எச்சரிக்கை


விழுப்புரம் மாவட்டத்தில்    வீடுகள், அரசு அலுவலகங்களில் 3 நாட்கள் தேசிய கொடியை பறக்க விட வேண்டும்    அவமதிப்பு செய்தால் கடும் நடவடிக்கை என கலெக்டர் மோகன் எச்சரிக்கை
x

விழுப்புரம் மாவட்டத்தில் வீடுகள், அரசு அலுவலகங்களில் 3 நாட்கள் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் எனவும், மேலும் கொடியை அவமதிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்கள், கட்டிடங்களில் நாளை (சனிக்கிழமை)முதல் 15-ந் தேதி வரை தேசிய கொடியை பறக்க விட வேண்டும். வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்றி உரிய மரியாதை செலுத்த வேண்டும். இதில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பதிலாக வேறு யாரேனும் தேசிய கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஊராட்சிகளில் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால் மாவட்ட கலெக்டருக்கு 94441 38000 என்ற எண்ணிலும், ஊராட்சிகள் உதவி இயக்குனருக்கு 74026 06326 என்ற எண்ணிலும் புகாரை தெரிவிக்கலாம். தேசிய கொடியை அவமதிப்பு செய்பவர்கள் மீதும், தேசிய கொடியை அவமதிப்பு செய்வது போன்ற பிற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story