காந்தி உருவப்படத்துக்கு கலெக்டர் மாலை அணிவித்து அஞ்சலி


காந்தி உருவப்படத்துக்கு கலெக்டர் மாலை அணிவித்து அஞ்சலி
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 30 Jan 2023 6:45 PM GMT)

காந்தி நினைவு தினத்தைெயாட்டி கன்னியாகுமரியில் அவரது உருவப்படத்துக்கு கலெக்டர் அரவிந்த் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

மாவட்ட செய்திகள்

காந்தி நினைவு தினத்தைெயாட்டி கன்னியாகுமரியில் அவரது உருவப்படத்துக்கு கலெக்டர் அரவிந்த் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

காந்தி நினைவு தினம்

மகாத்மா காந்தியின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஜனவரி 30-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நாடு முழுவதும் நேற்று காந்தியின் நினைவுதினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

குமரி மாவட்டத்திலும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மகாத்மா காந்தியின் 76-வது நினைவு தினத்தையொட்டி நேற்று கன்னியாகுமரியில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்தில் அவரது உருவப் படத்துக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெருமை சேர்க்க வேண்டும்

கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 30-ந்தேதி அன்று காந்தியடிகளின் நினைவு தினம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று(நேற்று) காந்தி நினைவு மண்டபத்தில் அமைந்துள்ள அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

காந்தியடிகள் இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மட்டுமல்லாது, உலக நாடுகளே போற்றுகின்ற வகையில் செயல்பட்டவர். இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த காந்தியின் பெருமைகளையும், தியாகங்களையும், அன்னாரது அமைதி மார்க்கத்தையும், கொள்கைகளையும், அவரது வழிகாட்டுதலின்படி நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு செய்வது காந்தியடிகளுக்கு மிகவும் பெருமை சேர்ப்பதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) லெனின் பிரபு, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ராஜேஷ், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், கன்னியாகுமரி பேரூராட்சி துணைத் தலைவர் ஜெனஸ் மைக்கேல் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story