தீரன் சின்னமலை சிலைக்கு கலெக்டர், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
மாலை அணிவித்து மரியாதை
பிறந்தநாளையொட்டி தீரன் சின்னமலை சிலைக்கு கலெக்டர் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிறந்தநாள் விழா
அறச்சலூர் ஓடாநிலையில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா நேற்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு, தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அந்தியூர் செல்வராசு எம்.பி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் கஸ்தூரி, அறச்சலூர் பேரூராட்சி தலைவர் விஜயகுமார், தாசில்தார் சண்முகசுந்தரம், பேரூராட்சி செயலாளர் அலுவலர் மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
பா.ஜ.க.
பாரதீய ஜனதா கட்சி சார்பில் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட தலைவர் வேதானந்தம் தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில துணைத்தலைவரும், குளூர் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான டி.தங்கராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில், துணைத்தலைவர் பாலசுப்பிரமணி, மண்டல் தலைவர் சிவக்குமார், மாநில திட்ட பொறுப்பாளர் பாலகுமார், பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
சிரவை ஆதினம்
ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை நினைவு மண்டபத்தில் உள்ள அவரது உருவப்படத்துக்கு சிரவை ஆதின தலைவர் கவுமார மடாலயம் குமார குருபர சாமிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது சாது சண்முக அடிகளார் பழனி, ஆற்றல் பவுண்டேசன் நிறுவனர் ஆற்றல் அசோக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சமூகநீதி மக்கள் கட்சி
சமூகநீதி மக்கள் கட்சி மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை சார்பில், நிறுவன தலைவர் வடிவேல் ராமன் தலைமை தாங்கி, சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில பொதுச்செயலாளர் வி.எஸ்.சண்முகம், தலைமை நிலைய செயலாளர் கண்ணையன், ஊடக பிரிவு செயலாளர் சதீஸ்பாபு, மாவட்ட செயலாளர் மூர்த்தி, இளைஞர் அணி நிர்வாகிகள் பூபாலகிருஷ்ணன், கோவிந்தராஜன், தினேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.