கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 லட்சம் வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டார்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 லட்சம் வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டார்
x
தினத்தந்தி 5 Jan 2023 7:00 PM (Updated: 5 Jan 2023 7:00 PM)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதற்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டார்.

கள்ளக்குறிச்சி

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 1.1.2023-யை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர்களாக பட்டியலில் சேர்த்தல், ஏற்கனவே பட்டியலில் உள்ளவர்களில் திருத்தம் மற்றும் நீக்கம் செய்வது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1-11-2022 முதல் 8-12-2022 வரை சிறப்பு சுருக்க திருத்தப்பணிகள் நடைபெற்றது.

மாவட்டத்தில் 1,274 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற முகாமில் மொத்தம் 37 ஆயிரத்து 538 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டது. இதையடுத்து 2023-ம் ஆண்டுக்கான வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் ஷ்ரவன்குமார் நேற்று வெளியிட்டார்.

தொடர்ந்து கலெக்டர் ஷ்ரவன்குமார் நிருபர்களிடம் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 5 லட்சத்து 58 ஆயிரத்து 79 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 56 ஆயிரத்து 103 பெண் வாக்காளர்கள், 209 3-ம் பாலினத்தவர்கள் என மொத்தம் 11 லட்சத்து 14 ஆயிரத்து 391 வாக்காளர்கள் உள்ளனர்.

பொதுமக்கள் பார்வைக்கு

இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள், நியமன வாக்குச்சாவடி அமைவிடங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பாக தகவல்கள் ஏதேனும் தேவைப்பட்டால் அலுவலக வேலை நாட்களில் வேலை நேரங்களில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மைய தொலைபேசி எண் 1950-யை தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, தனி தாசில்தார் (தேர்தல்) பாலகுரு, தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், அ.தி.மு.க. மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சீனிவாசன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் அருள், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் நல்லத்தம்பி, கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி கஜேந்திரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story