"கிராமங்களின் வளர்ச்சிக்கு நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குங்கள்"; கலெக்டர் பூங்கொடி பேச்சு


கிராமங்களின் வளர்ச்சிக்கு நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குங்கள்; கலெக்டர் பூங்கொடி பேச்சு
x
தினத்தந்தி 16 Jun 2023 9:00 PM GMT (Updated: 16 Jun 2023 9:00 PM GMT)

கிராமங்களின் வளர்ச்சிக்கு நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குங்கள் என்று கிராம குழுவினருக்கான பயிற்சியில் கலெக்டர் பூங்கொடி பேசினார்.

திண்டுக்கல்

கிராமங்களின் வளர்ச்சிக்கு நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குங்கள் என்று கிராம குழுவினருக்கான பயிற்சியில் கலெக்டர் பூங்கொடி பேசினார்.

கிராம குழுவினருக்கு பயிற்சி

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகியவை தொடர்பாக கிராம அளவிலான குழுவினருக்கான பயிற்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கி பேசியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இதுவரை 130 கிராமங்களில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு மேலும் 60 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. கிராமத்தில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் அனைத்து துறை திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.

கிராமத்தின் வளர்ச்சி

ஒவ்வொரு நபரும் ஏதாவது ஒரு திட்டத்தில் கட்டாயம் பயன்பெற்று இருக்க வேண்டும். சமுதாய முன்னேற்றத்துக்கு திட்டங்களை வகுத்து கிராமத்தின் வளர்ச்சிக்கு நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இதற்காக கிராம மக்களிடம் திட்டங்களை தெரிவிக்க வேண்டும். பின்னர் துறை வாரியாக பயனாளிகளை கண்டறிந்து செயல்திட்டம் தயாரித்து செயல்படுத்த வேண்டும். ஒட்டுமொத்த கிராமத்தின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் அனுசுயா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி, துணை கலெக்டர் ஆர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் அமர்நாத், ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story