போலீஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கலெக்டர் வளர்மதி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது போலீஸ் நிலையத்தில் தினமும் பராமரிக்கப்படும் ஆவணங்கள், குற்றப்பதிவேடுகள் ஆகியவற்றை கூட்டாக பார்வையிட்டனர். போலீஸ்நிலைய வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என ஒவ்வொரு அறையாக சென்று பார்வையிட்டனர்.
மேலும் அங்கு கண்காணிப்பு பணிகளுக்காக பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா எனவும், அதே போல நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்ட கேமராக்கள் முறையாக கண்காணிக்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தனர். ராணிப்பேட்டை துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story