வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு


வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
x

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் கோப்புகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீர் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறையின் சார்பில் இ-அடங்கல், இ-பட்டா, இலவச வீட்டுமனை பட்டா, நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றம், மூத்த குடிமகன்கள் பராமரிப்பு, நிலம் மாற்றம், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் வருமான சான்றிதழ், பழங்குடியினர் சாதி சான்றிதழ், விதவை சான்றிதழ், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்கள் ஆகிய பணிகளில் நிலுவையில் உள்ள மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். மேலும் இலவச வீட்டுமனை பட்டா கோரிக்கை மனுக்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீதிமன்ற கோப்புகள், உட்கோட்ட சிறப்பு நிர்வாக நடுவரின் பணிகள், குற்ற நடைமுறைகளை கட்டுப்படுத்துவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அனந்த கிருஷ்ணன், தாசில்தார்கள் சம்பத், மோகன், பழனி, நகராட்சி ஆணையர் மாரிசெல்வி, அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் உடன்இருந்தனர்.


Next Story