செட்டிக்குளம் ஏரியில் கலெக்டர் ஆய்வு


செட்டிக்குளம் ஏரியில் கலெக்டர் ஆய்வு
x

செட்டிக்குளம் ஏரியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிக்குளம் ஏரியை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மழைக்காலம் வருவதற்குள் ஏரியில் மண்டியுள்ள செடி, கொடிகள், மரங்களை அப்புறப்படுத்தி பாசனத்திற்கு முறையாக நீர்வரத்து இருக்கும் வகையில் மதகுகளை சரி செய்ய வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஏரியின் கரைகளை ஒட்டி ஏதேனும் ஆக்கிரமிப்புகள் இருந்தாலோ, மதகுகள் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தாலோ அவற்றை அகற்றி, மழை காலங்களில் ஏரிக்கு வரும் நீர் முறையாக முழுமையாக மக்களுக்கு பயன்படும் வகையில் பயன்படுத்தப்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து, செட்டிகுளத்தில் அமைந்துள்ள சின்ன வெங்காயம் சேமிப்பு கிடங்கில் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வெங்காயத்தை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்னென்ன என்பதை கேட்டறிந்தார். மேலும், சின்ன வெங்காயத்தை தோல் உரிக்கும் எந்திரம், முறையாக காற்று புகாத வகையில் பேக் செய்யும் எந்திரம், வெங்காயத்தில் அளவிற்கு ஏற்ப அவற்றை தரம் பிரிக்கும் எந்திரம் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டார். சின்ன வெங்காயத்தை சேமிப்பதற்காக கட்டப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்கினை பார்வையிட்டார்.

சேமிப்பு கிடங்கை சுற்றி செடிகள் மண்டியிருப்பதை உடனடியாக அகற்றி அப்பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு சின்ன வெங்காயம் சேமிக்கப்படுகிறது, எவ்வளவு வெங்காயம் தோலுரிக்கப்பட்டு மதிப்பு கூட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற விவரத்தை மாதாந்திர அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


Next Story