அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு
திருக்கண்ணபுரம் அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு
திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் வருகை பதிவேடு, பள்ளி வரவு செலவு கணக்குகள், கழிவறை வசதி, குடிநீர் வசதி, வகுப்பறை வசதி, பள்ளி வளாக தூய்மை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். மேலும் பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பதால் அவர்களின் நலன் கருதி கழிவறை மற்றும் குடிநீர் வசதியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் நிர்மலாராணி, ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர், பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) திருமாவளவன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழுவினர், பொதுமக்கள் உடன் இருந்தனர்.