ரூ.96 லட்சத்தில் வளர்ச்சித்திட்ட பணிகள்
குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.96.06 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் .கிறிஸ்தவராஜ் ஆய்வு செய்தார்.
ரூ.96 லட்சத்தில்வளர்ச்சிப்பணிகள்
திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரியநல்லூர் ஊராட்சி வேங்கிபாளையத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டம், வடிகால்கள் அமைக்கும் பணிகள், ஜோதியம்பட்டி ஊராட்சியில் கதிர் அடிக்கும் தளம், 15 வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மேல்நிலைத் தொட்டி, தனிநபர் இல்ல குடிநீர் விஸ்தரிப்பு பணிகள், சமையலறை கட்டிடம், கொக்கம்பாளையம் ஊராட்சி இடையபட்டியில் பள்ளகள் உட் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இரண்டு வகுப்பறைகள், சமையலறை கட்டிடப் பணிகள்,
நந்தவனம் பாளையம் ஊராட்சியில், மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள், தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்ட வரும் சமையலறை கட்டிடங்கள் உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் 96.06 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.
கலெக்டர் ஆய்வு
வடசின்னரி பாளையம், குங்காரு பாளையம், செங்கோடம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விண்ணப்பம் பதிவு செய்யும் மையத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தாராபுரம் ஆர்.டி.ஓ. செந்தில் அரசன், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேஷ் குமார், சுரேஷ்குமார், தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்
காங்கயம்
இதுபோல் காங்கயம் தாலுகா ஊதியூர் மற்றும் வடசின்னாரிபாளையம் ஊராட்சிக்குப்பட்ட குங்காருபாளையம் பகுதியில் நேற்று கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது. இந்த கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் பதிவு மையத்தை மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து குங்காருபாளையத்தில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன் வழங்கும் பணிகளையும், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், செங்கோடம்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தாராபுரம் ஆர்.டி.ஓ. செந்தில்அரசு, காங்கயம் தாசில்தார் புவனேஸ்வரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.