மீட்கப்பட்ட 37 கிளிகளை பறக்க விட்ட கலெக்டர்
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மீட்கப்பட்ட 37 கிளிகளை கலெக்டர் பறக்க விட்டார். அவர், விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்
கோவை
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மீட்கப்பட்ட 37 கிளிகளை கலெக்டர் பறக்க விட்டார். அவர், விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
கிளிகள் மீட்பு
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் கோவை வனவியல் விரிவாக்க கோட்டம் மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு விவசாயிக ளுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
கோவையில் இறக்கைகளை வெட்டி பல இடங்களில் விற்ப னைக்காக வைக்கப்பட்டு இருந்த 37 கிளிகள் மீட்கப்பட்டன. அந்த கிளிகள் மாவட்ட வன அதிகாரி அலுவலக வளாகத்தில் பராமரிக்கப்பட்டது.
தற்போது கிளிகளுக்கு இறக்கைகள் வளர்ந்த நிலையில் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அந்த கிளிகளின் கூண்டை கலெக்டர் சமீரன் திறந்து விட்டார். உடனே அந்த கிளிகள் சிறகடித்து பறந்து சென்றன.
பசுமை சாம்பியன் விருது
இதையடுத்து தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக பங்காற்றிய அத்தப்பக்கவுண்டன்புதூரை சேர்ந்த ஜி.தங்கவேல், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு நிறுவனர் மணிகண்டன் உள்பட 3 பேருக்கு பசுமை சாம்பியன் விருது மற்றும் தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகையை கலெக்டர் சமீரன் வழங்கினார்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் காடு மற்றும் மரங்களின் பரப்ப ளவை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
இதற்காக கோவை வனவியல் விரிவாக்க மையத்தில் நாற்றங் கால் மூலம் தேக்கு, மலைவேம்பு, சவுக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, ஈட்டி புங்கன், நெல்லி, நாவல் உள்பட 1 லட்சத்து 40 ஆயிரம் மரக்கன்று உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அவை, 1000 விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்றனர்.