லாரி டிரைவருடன் கல்லூரி மாணவி தஞ்சம்


லாரி டிரைவருடன் கல்லூரி மாணவி தஞ்சம்
x

கருங்கல் போலீஸ் நிலையத்தில் லாரி டிரைவருடன் கல்லூரி மாணவி தஞ்சம்

கன்னியாகுமரி

கருங்கல்,

கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மகள் வைஷ்ணவி (வயது19). இவர் மங்கலக்குன்று பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் மாணவி வைஷ்ணவியை ேதடி வந்தனர்.

இந்தநிலையில் மாயமான மாணவி மாங்கரை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் வினு (34) என்பவருடன் கருங்கல் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது இருவரும் காதலித்து வந்ததாகவும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினர். இதனையடுத்து போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காதல் ஜோடியை சேர்த்து வைத்து அனுப்பினர்.


Next Story