புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் தோறும் ரூ.1,000 உதவித்தொகைக்கு கல்லூரி மாணவிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் தோறும்  ரூ.1,000 உதவித்தொகைக்கு கல்லூரி மாணவிகள் விண்ணப்பிக்கலாம்  கலெக்டர் தகவல்
x

சேலம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000 உதவித்தொகைக்கு கல்லூரி மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம்

சேலம்,

இது குறித்து கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுமைப்பெண் திட்டம்

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல்படிப்பு அல்லது தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 5-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுவரை தமிழகத்தில் 2, 3 மற்றும் 4-ஆம் ஆண்டில் படிக்கும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித்தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள். தற்போது https://pudhumaipenn.tn.gov.in என்ற வலைத்தளத்தில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

30-ந் தேதி வரை பதிவு

இந்த வலைத்தளத்தில், மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலமாக வருகிற 30-ந் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் படிக்கிற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து விளக்கிட, அனைத்து மாணவிகளுக்கும் அந்தந்த கல்வி பயிலும் நிறுவனங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண் (EMIS No), மாற்றுச்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.

முதலாம் ஆண்டு மாணவிகள்

மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருந்தால் சமூக நல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

மேற்படிப்பு அல்லது தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு படிக்கும் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும் விண்ணப்ப முறையை சரியாகத் தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.


Next Story